
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்புடைய 4 அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்தது.
கைதான அவர்கள் அனைவரும் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்ராஜெயா நீதிமன்றத்தால் நேற்று அவர்களுக்கு தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
மூன்று நபர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் இர்சா சுலைகா பிறப்பித்தார்.
மற்றொருவர் மூன்று நாட்கள் தடுப்புக்காவல் செய்யப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டார்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தினார்.
மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 16a இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
இந்தப் பிரிவு லஞ்சம் கோருதல் அல்லது பெறுதல் தொடர்பான விசாரணைகளுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

