வங்சாமாஜுவில் மரம் விழுந்ததில் 9 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன

வங்சாமாஜுவில் மரம் விழுந்ததில் 9 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

இந்த சம்பவம் இங்குள்ள வங்சாமாஜு பிளாக் ஜி9, பிரிவு 2இல் நேற்று நிகழ்ந்தது என்று கோலாலம்பூர் ஏபிஎம் அதிகாரி அஹ்மத் ஜுனைடி கூறினார்.

நேற்று இரவு 11.43 மணிக்கு மரம் விழுந்தது குறித்து தனது தரப்பினருக்கு தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

உடனடியாக ஏபிஎம் அதிகாரிகள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு வாகனத்தின் மீது விழுந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்றும் பணிகள் உடனடியாக தொடங்கியது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 17 வாகனங்கள் சேதமடைந்தன.

அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒன்பது கார்கள், எட்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

இதில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles