ஜொகூர் மாநில இந்திய சமூதாயத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம்!

ஜொகூர் பாரு, மார்ச் 3-
Bersekutu Bersatu Negeri Johor அமைப்பின் உதவி தலைவர் பூபாலன் பொன்னுசாமி தலைமையில், ஜொகூர் மாநிலம் முழுவதும் இந்தியர்களின் முன்னேற்றம் மற்றும் வளமான எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுப்பதற்காக ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்திய சமூகத்தினரின் உரிமைகள், முன்னேற்ற வாய்ப்புகள், மற்றும் அரசு மற்றும் தனியார் துறைகளில் அவர்களின் இடத்தை உறுதி செய்யும் நோக்கில் பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதில் Bersekutu Bersatu Negeri Johor அமைப்பின் தலைவர்கள், சமூகத்திற்காக அக்கறை கொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த முயற்சி எதிர்காலத்தில் இந்திய சமூகத்திற்காக பல நன்மைகளைத் தரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Bersekutu Bersatu Negeri Johor , இந்திய சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உறுதியாக செயல்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles