எம்ஏசிசி விசாரணையில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி சாட்சி அல்ல! சந்தேகத்திற்குரிய நபர்

புத்ரா ஜெயா, மார்ச் 3-
எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வரும் ஊழல் பண மோசடி வழக்கில்
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சாட்சி அல்ல.

அவர் இப்போது சந்தேகக்குரிய நபராகக் கருதப்படுகிறார் என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி இன்று அறிவித்துள்ளார்.

எம்ஏசிசி அதிகாரிகள் நடத்திய சோதனையைத் தொடர்ந்து முன்னாள் பிரதமரின் அதிகாரிகளிடம் இருந்து 17 கோடி வெள்ளி மற்றும் 70 லட்சம் வெள்ளி தங்க கட்டிகள் சிக்கியதாக எம்ஏசிசி அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தற்போது சந்தேக நபராக கருதப்படுகிறார்.

இந்த நேரத்தில் முன்னாள் பிரதமருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 36இன் படி அவரது சொத்துக்கள் குறித்த விவரங்கள் கேட்கப்படும் என்று அவர் சொன்னார்.

வரும் புதன்கிழமை அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles