காவடி நடனத்தை இழுவு படுத்தியவர்கள் மீது! கடும் நடவடிக்கை எடுங்கள் -டத்தோ கண்ணா சிவகுமார்

கோலாலம்பூர் மார்ச் 4-
தைப்பூசத் தை முன்னிட்டு
வேல் வேல்” புனிதமான காவடி நடனத்தை வைத்து இந்து மதத்தை கேலி செய்த ERA FM ஊழியர்களின் இளிவான செயலை வன்மையாக கண்டிப்பதாக மகிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்களின் ஒருங்கிணைப்பு பேரவையின் தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் தெரிவித்தார்.

தனியார் வானொலியின்
இச்செயல் மலேசியாவில் உள்ள இந்துக்களின் நம்பிக்கை மற்றும் மரபுகளுக்கு அப்பட்டமான அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பொறுப்புள்ள ERA FM வானொலி நிறுவனம் மற்ற மதங்களை புண்படுத்தும் செயலை செய்திருக்கக்கூடாது.

மத மற்றும் கலாச்சார உணர்வுகள் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாவிட்டால், அவர்களின் ஊழியர்கள் ஊடகத்துறையில் பணியாற்ற முற்றிலும் தகுதியற்றவர்கள் என்று டத்தோ கண்ணா சிவகுமார் கடுமையாக சாடியுள்ளார்.

இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியாது.

இந்து சமூகத்தை ஆழமாக புண்படுத்தும் கேலிக்கூத்து. இத்தகைய செயல் தேசத்தின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகும்.

மலேசியா பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மற்ற மதத்தை புண்படுத்தும் செயலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

சம்பந்தப்பட்ட வானொலி நிறுவனத்திற்கு எதிராக எம்ஏஎம்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles