விரிவான விசாரணை நடத்துமாறு MCMC-க்கு உத்தரவு பிறப்பித்தார் அமைச்சர் பாமி பட்சில்

கோலாலம்பூர் மார்ச் 4-
தைப்பூசத்தை முன்னிட்டு வேல் வேல்” புனிதமான காவடி நடனத்தை நகைச்சுவையாக இந்து மதத்தை கேலி செய்த ERA FM ஊழியர்களின் இளிவான செயல் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வானொலி நிலையத்தின் ஊழியர்கள் பிற மத சடங்குகளை கேலி செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த செயல்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு புகார்கள் வந்துள்ளன என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார்.

MCMC தலைமையகத்திற்கு வருமாறு ஆஸ்ட்ரோ மற்றும் வானொலி நிலைய நிர்வாகத்தை அழைப்பது உள்ளிட்ட விரிவான விசாரணையை நடத்துமாறு MCMC-க்கு உத்தரவிட்டுள்ளேன்.

தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என்று அவர் அறிக்கை வழி தெரிவித்துள்ளார்.

தக்க நேரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்த அமைச்சர் பாமி பாட்சிலுக்கு நன்றி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles