இந்துக்களை இழிவுபடுத்திய விவகாரம்! ஏரா எப்.எம் வானொலியை சேர்ந்த 3 பேரிடம் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர் மார்ச் 5-
தைப்பூசத்தை முன்னிட்டு வேல் வேல் காவடி நடனத்தை கேலி செய்த ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் ஏரா எப்.எம். வானொலியை சேர்ந்த 3 ஊழியர்கள் மீது போலீசார் விசாரணை கோப்பை திறந்துள்ளனர்.

ஏரா எப்.எம்.நிர்வாகத்தைசேர்ந்த மூவரும் மூன்று அறிவிப்பாளர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் இன்று புக்கிட்
அமான் வந்தடைந்தனர்.

இந்துக்களை இழிவுபடுத்திய விவகாரம் தொடர்பாக ஏரா எப்.எம். ஊழியர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ நசாரூடின் ஹூசேன் நேற்று அறிவித்தார்.

வேல் வேல் காவடி நடனத்தை ஏரா எப்.எம்.ஊழியர்கள் கேலி கிண்டல் செய்த விடியோ பதிவு நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறு மல்டிமீடியாவுக்கு தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் போலீஸ் 44 புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த செயலுக்கு ஆஸ்ட்ரோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு மூன்று ஊழியர்களை இடைக்கால நீக்கம் செய்துள்ளது.

ஒரு பக்கம் மன்னிப்பு கேட்டாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles