
நாளை புத்ரா ஜெயாவில் நடைபெறவுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்குப் பிரதமர் துறையின் மத விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ முஹம்மத் நயிம் மொக்தார் அழைப்பு விடுத்துள்ளார்.
மலேசியாவின் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, ஜாக்கிம் மற்றும் 13 இஸ்லாமிய மத விவகார நிறுவனங்களுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சி, புத்ரா ஜெயாவின் பெர்சின்ட் 3, துவாங்கு மிசான் ஜைனல் அபிடின் மசூதியில் மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்று முஹம்மத் நயிம் மொக்தார் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
மொத்தம் 10,000 இஃப்தார் உணவுப் பொட்டலங்கள் பொது மக்களுக்கு வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

