
சபா மாநில தேர்தலில் வாரிசான் கட்சி
தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா கூறினார்.
வாரிசான் கட்சி இதுவரை வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் 17ஆவது சபா மாநிலத் தேர்தலில் போட்டியிடும்.
வாரிசானை மற்ற கட்சிகளுடன் இணைப்பதாக பல்வேறு ஊகங்கள், வதந்திகள் வெளிவந்துள்ளது.
இருந்தாலும் தனது கட்சி தனியாகப் போட்டியிடுவது மிகவும் வசதியாக இருப்பதாக அவர் கூறினார்.
வாரிசனுக்கும் வேறு எந்தக் கட்சிக்கும் இடையே எந்த ஒத்துழைப்பும் இல்லை.
கடந்த 1970 முதல் 1990கள் வரை தேர்தல்களில் தனித்து வெற்றி பெற்ற சபா ஐக்கிய மக்கள் கட்சி (பெர்ஜெயா), சபா ஐக்கியக் கட்சியின் (பிபிஎஸ்) வரலாற்றை பல்லினக் கட்சி மீண்டும் செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எந்தவொரு கட்சியிலும் சேருவது குறித்தும் எந்த விவாதமோ அல்லது முடிவோ எடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்போதைக்கு வாரிசான் தனித்துப் போட்டியிடும் என்று அவர் கூறினார்.

