
பிறை மார்ச் 9-
இளம் கால்பந்து விளையாட்டாளர் களை உருவாக்கும் படலத்தில் இறங்கி இருக்கும் மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கம் வட மாநிலத்தில் தனது கால்பந்து பயிற்சி பட்டறையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி உள்ளது.
நேற்று பினாங்கு மாநிலத்தில் தொடங்கிய மீபா இளையோர் கால்பந்து பயிற்சி பட்டறையில் 57 இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மீபா பியோண்ட் இளைஞர் கால்பந்து பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் கமலேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி திட்டத்தை காண மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் ஸ்ரீ சங்கர் சிறப்பு வருகை புரிந்தார்.
நேற்று நடைபெற்ற கால்பந்து பயிற்சி பட்டறையில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
நாடு தழுவிய அளவில் நான்கு ZON வடிவில் இந்த கால்பந்து பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக வட மாநிலத்தில் தொடங்கி உள்ள இந்த பயிற்சி திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது என்று அவர் சொன்னார்.

