


கோலாலம்பூர் மார்ச் 10-
இனிய நோன்பு பெருநாளை முன்னிட்டு விலாயா மாநில கிம்மா கட்சி – Ehsan group of companies சார்பில் 200 பேருக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது.
விலாயா மாநில கிம்மா தலைவர் டாக்டர் ஹாஜி முகமட் இதயத்துலா தலைமையில் வங்சா மாஜூ dewan residensi wangsa meranti மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 200 பேர் நேரடியாக ரமலான் உதவிகளை பெற்றுக் கொண்டனர்.
கிம்மா கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி சைட் இப்ராஹிம், கிம்மா துணை தலைவர் ஹாரிஸ் மற்றும் உதவித் தலைவர் ஹூசேன் உட்பட உயர்மட்ட தலைவர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.
Ehsan group of companies தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் அவர்கள் இன்று 200 பேருக்கான ரமலான் உதவி செலவுகளை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித நேயமிக்க டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் ஒவ்வொரு ஆண்டும் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பேருதவி புரிந்து வருகிறார்.
இறைவன் கருணையால் கிம்மா கட்சி ஆதரவோடு நாடு தழுவிய அளவில் ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு உணவு கூடைகளை Ehsan group of companies வழங்கி வருகிறது என்று டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் தெரிவித்தார்.