
நோன்பு பெருநாளை முன்னிட்டு சாலை போக்குவரத்து அமலாக்கத் துறை, ஜேபிஜே இம்மாதம் மார்ச் 28,29 மற்றும் ஏப்ரல் 5, 6 ஆகிய தேதிகளில் கனரக வாகனங்கள் சாலையில் பயணிக்க தடை விதிக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
பெருநாளை காலத்தில் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கும் பொது மக்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் சாலைகளில் விபத்து அபாயத்தையும் குறைக்கவும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கனரக ஓட்டுநர்கள் இந்தக் கட்டுப்பாட்டிற்கு இணங்குமாறு கேட்டுக்கொள்கின்றன.
தடையை மீறும் கனரக ஓட்டுநருக்கு எதிராக 2000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அந்தோனி லோக் குறிப்பிட்டார்.
முன்னதாக, சீனப் புத்தாண்டின் போது அமல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கையால் சாலை விபத்துகள் 10 சதவீதம் குறைந்துள்ளதாகவும் 7,882 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டதையும் அந்தோனி லோக் சுட்டிக் காட்டினார்.
பண்டிகைக் காலம் முழுவதும் சாலைப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அந்தோனி லோக் நினைவூட்டினார்.

