
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புடைய ஊழல், பணமோசடி வழக்குகள் தொடர்பான விசாரணையில் 36 நபர்களிடமிருந்து வாக்குமூலங்களை எம்ஏசிசி பதிவு செய்துள்ளது.
ஆதாரங்களின்படி, முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 32 சாட்சிகள், நான்கு இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் அதிகாரிகளின் வாக்குமூலங்கள் நேற்று வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், விரைவில் மொத்தம் 23 புதிய சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்படுவார்கள்.
மேலும் நான்கு சாட்சிகள் தங்கள் உரையாடல்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதே வேளையில் முன்னாள் பிரதமர் தனது வங்கி ஆவணங்களை எம்ஏசிசியிடம் சமர்பிக்க வேண்டும். இந்த அறிக்கைக்காக எம்ஏசிசி காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பெரா நாடாளுமன்ற உடல்நிலையை அறிய, இஸ்மாயில் சப்ரிக்கு சிகிச்சை அளித்து வந்த பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் டத்தோ பட்டம் கொண்ட மருத்துவரை எம்ஏசிசி விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

