
சுயேட்சை மதப்போதகர் முஹம்மத் ஸம்ரி வினோத் காளிமுத்துவைக் காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இதனை DAP நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர், முன்னாள் இரண்டாவது துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.இராம்சாமி வலியுறுத்தியுள்ளனர்
ஸம்ரியின் கோரிக்கைக்குச் செவிசாய்ப்பதை விட அவரைக் காவல்துறை கைது செய்து நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்று இராமசாமி தெரிவித்தார்
இம்மாதிரியான விவாதங்கள், கலந்துரையாடல்கள் யாவும் தேவையற்றது. இதனால் இன பதற்றத்தை மட்டுமே உருவாக்க முடியும் என்று இராமசாமி விளக்கம் அளித்தார்
காவல்துறையினர் தகுந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். மற்ற சமயத்தைப் பற்றி இழிவாக பேசுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார் .
முன்னதாக, முஹம்மத் ஸம்ரி வினோத் பொது விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாரா என்று ம.இ.கா துணைத்தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கேட்ட நிலையில் முஹம்மத் ஸம்ரியும் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், இந்த விவாதம் என்பது ஆரோக்கியமற்ற இன நல்லிணக்க சூழலை ஏற்படுத்து என்று இதற்கு முன் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ டகாங் கூறியிருந்தார்

