
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஆட்சியில் மதிக்கப்படக்கூடிய ஒரு சமுதாயமாக இந்திய சமுதாயம் விளங்க வேண்டும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டார்.
பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெறுவதற்கு இந்திய வாக்குகள் முக்கிய பங்காற்றி உள்ளது.
அந்த வகையில் இந்திய சமுதாயத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.
குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகள் காப்பாற்றப்பட வேண்டும்.
சமுதாயம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட வேண்டும்.
இந்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு மேல் இந்திய சமுதாயம் நசுக்கப்பட்டது.
இனியும் நசுக்கப்படும் கூடாது என்று மலேசிய தமிழர் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு விழாவை அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைத்த போது அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

