
பெற்றோர்களின் வருமான வரம்பைக் கருத்தில் கொள்ள்ளாமல் அனைத்து மாணவர்களுக்கும் 150 வெள்ளி உதவித் தொகை வரும் ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பெருந்தொற்று பரவல் காரணமாக விடுபட்ட தலைமுறையினரின் பிரச்சனை மற்றும் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குத் தேவையான உபகரணங்களை ஏற்படு செய்ய வேண்டிய கட்டாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

