

நாட்டில் உள்ள இந்திய தொழில் துறைகள் எதிர்நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண மனித வள அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று மனித வள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்தார்.
உண்மையில் எவ்வளவு தொழிலாளர்கள் தேவைப் படுகிறார்கள் என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறேன்.
பல இந்திய அமைப்புகள் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கி இருக்கிறார்.
இவர்களுக்கு எவ்வாறு உதவுவது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்தி கொண்டிருக்கிறேன்
எந்தெந்த தொழில் துறைகளுக்கு எவ்வளவு பேர் தேவைப்படுகிறார்கள் என்ற முழுமையாக பட்டியல் தேவைப்படுகிறது என்றார்.
மலேசியா இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், பேராக் மாநில இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் ஆகியோர் தலையிலான சங்க பொறுப்பாளர்கள் இன்று மனித வள அமைச்சர் வி சிவகுமாரை நாடாளுமன்றத்தில் சந்தித்த தாங்கள் எதிர் நோக்கி இருக்கும் தொழிலாளர் பிரச்சனை குறித்து விவாதித்தனர்.

