ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கில் மலேசியா இந்தியர் குத்தகையாளர் சங்கம்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தது ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க மலேசியா இந்தியர் குத்தகையாளர் சங்கம் இலக்கு கொண்டிருப்பதாக சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள டத்தோ ஜி. ஜனாதனன் தெரிவித்தார்.

நாட்டில் இந்திய குத்தகைதாரர்களை பிரதிநிதிக்கும் ஒரு தலையாய சங்கமாக மலேசியா இந்தியர் குத்தகையாளர் சங்கம் விளங்குகிறது.

ஒரு காலத்தில் 800 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் இப்போது 250 க்கும் குறைவான உறுப்பினர்கள் இருப்பது பெருத்த ஏமாற்றமாகும்.

மீண்டும் ஒரு பலமான சங்கமாக மலேசியா இந்தியர் குத்தகையாளர் சங்கம் மாறும் வகையில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதனிடையே மலேசியா இந்தியர்
குத்தகையாளர் சங்கத்தின் புதிய தலைவராக டத்தோ ஜி. ஜனாதனன், துணைத் தலைவராக டத்தோ சேகரன், உதவித் தலைவர்களாக எஸ். சரவணன், டத்தோ கணேஷ் மூராஜ், செயலாளராக தயாளன், துணை செயலாளராக ரிச்சர்ட், பொருளாளராக அனந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles