
கோலாலம்பூர்: மார்ச் 12-
கண் தெரியாதவர்களும் மாற்றுத் திறனாளிகளும் பிச்சைக்காரர்கள் இல்லை. எங்களை இழிவாக எடைபோட வேண்டாம்.
எங்களுக்கும் சம உரிமை கொடுங்கள் என்று ரவாங் தன்னிலை மாற்று திறனாளிகள் பயிற்சி மையத்தின் தலைவர் பிரான்ஸ் சிவா இன்று கடுமையாக வலியுறுத்தினார்.
நாட்டில் அதிகமான கண் தெரியாதவர்களும் மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர்.
பல ஆண்டுகளாக நாங்கள் பல பிரச்சினைகளையும் இன்னல்களை எதிர்நோக்கி வருகிறோம்.
இது பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல கோரிக்கைகள் பல மனுக்களையும் கொடுத்துள்ளோம். ஆனால் எங்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.
தற்போது மடானி அரசாங்கத்தின் ஆட்சியிலும் அதே நிலைமை தான் நீடிக்கிறது.
தலைநகர் சுற்று வட்டாரங்களில் கண் பார்வையற்றவர்கள் நடந்து செல்வதற்காக சிறப்பு வழி தடங்கள் உள்ளது.
ஆனால் இந்த வழி தடங்களில் பொறுப்பற்றவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றன.
இதனால் அன்பரசி என்பவர் கீழே விழுந்து அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்பார்வையற்றவர்கள் நடந்து செல்லும் வழியில் வாகனங்களை நிறுத்தினால் அவர்களால் எப்படி நடந்து செல்ல முடியும்.
ஆகவே கோலாலம்பூர் மாநகர் மன்றம் விரைந்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று மதியம் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் முன் ஒன்று திரண்ட அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

