
பினாங்கு மாநில துணை முதல்வர் மற்றும் இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி குறுகிய காலப் பயணம் மேற்கொண்டு தமிழகம் சென்றுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ மற்றும் அவரது கட்சியினர் டாக்டர் இராமசாமியை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்ஷல், டத்தோ கணேஷ் உட்பட பலரும் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசு, தமிழக இந்து அறப்பணி வாரியம் மற்றும் தொழில் முனைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகள் கழித்து இப்போதுதான் முதல் முறையாக தமிழகம் செல்வதாக குறிப்பிட்ட அவர். இந்த பயணத்தின் மூலம் முதலீட்டு வாய்ப்புகளை பெற முடியும் என்றார்.

