வரும் ஜனவரியில் பொதுமக்களுக்கு சிறப்பு உதவி! பிரதமர் அன்வார் அறிவிப்பு

தமது தலைமையிலான புதிய அரசாங்கம் பொதுமக்களுக்கு பண உதவியை தொடர்ந்து வழங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் கடைசி நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்று வர்ணிக்கப்படும் இன்றைய கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனை அறிவித்தார்.

ஜனவரியில் வழங்கப்படும் இந்த சிறப்பு உதவித் தொகையால் 90 லட்சம் குடும்பங்கள் பயனடையும்.

அனைத்து குடும்பங்களுக்கும்” தலா 300 வெள்ளி வழங்கப்படும், அதே சமயம் ஒற்றையர்களுக்கு 100 வெள்ளி வழங்கப்படும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles