
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஹோலா மொஹாலா எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு கடந்த மார்ச் 14 தொடங்கி மார்ச் 16 வரை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு நேற்றும் ஏராளமான பக்தர்கள் தங்கக்கோவிலுக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் கையில் இரும்பு கம்பியுடன் நுழைந்த நபர் ஒருவர் கோவிலில் குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.
கையில் ஒரு இரும்புக் கம்பியுடன் வந்த அவரை பார்த்த கோவில் ஊழியர் ஜஸ்பீர் சிங் தடுக்க முயன்றார். ஆனால் அந்த நபர் ஊழியரை கம்பியால் தாக்கினார். பின் பக்தர்களும் மற்ற ஊழியர்களும் அந்த நபரை தடுக்க முயன்றபோது, அவர்களையும் அவர் தாக்கினார்.

