மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு! திரெங்கானு மந்திரி பெசார் நியூசிலாந்தில் விடுமுறையா?

பருவமழையால் திரெங்கானு மாநிலத்தில் 10,725 குடும்பங்களைச் சேர்ந்த 39,108 பேர் நிவாரண மைதானங்களில் தங்கி உள்ளனர்.

மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் வேளையில் திரெங்கானு மாநில மந்திரி பெசார் அமாட் சம்சூரி தன் குடும்பத்தினருடன் நியூசிலாந்தில் விடுமுறையில் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் வெளிநாடு பயணம் தேவையா என்று அம்னோவை சேர்ந்த முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் அடாம் லோக்மான் கேள்வியை எழுப்பியுள்ளார்.

வெள்ளம் ஏற்படும் நேரத்தில் முக்கியமான ஒரு மாநில மந்திரி பெசார் விடுமுறையில் வெளிநாடு செல்லாமா என்று அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அஸ்ராப் வாஜாடி கேள்வியை எழுப்பியுள்ளார்.

திரெங்கானுவில் நாளுக்கு நாள் வெள்ளம் மோசம் அடைந்து வருகிறது.

திரெங்கானு மந்திரி பெசார் அமாட் சம்சூரி எங்கே போனார் என்று மக்களும் நெட்டின்களும் கேள்வியை எழுப்பினர்.

திரெங்கானு மந்திரி பெசார் எங்கே போனார்.
வெளிநாட்டில் விடுமுறையில் இருக்கிறாரா என்று கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles