


சுங்கைவே, மார்ச் 16-
சுங்கைவே டேசா மெந்தாரியில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
டேசா மெந்தாரி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் ஹரிச்சந்திரன் தலைமையில் இன்று காலையில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஆகம முறைப்படி கும்பங்களுக்கு புனித நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

