வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள் தொடரவேண்டும்! டத்தோ ஹாஜி அப்துல் அமிட் வலியுறுத்து

ஈப்போ, மார்ச் 16-
வறுமை நிலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கவேண்டும் என்று Essan group of companies நிறுவனர் டத்தோ ஹாஜி அப்துல் அமிட் வலியுறுத்தினார்.

பெரும் பாலும் பெருநாள் காலங்களில் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த உதவிகளை அரசு சாரா இயக்கங்கள் தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து வழங்குவதின் வழி வசதி குறைந்த மக்களின் சுமையை குறைக்க வழி செய்யும் என்று அவர் கூறினார்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு ஈப்போவில் உள்ள இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு உதவி பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கியப் பின்னர் இவ்வாறு செய்தியாளர்களிடம் பேசினார்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கு பொருள் மற்றும் நிதி உதவியை தமது் நிறுவனம் நாடு முழுவதிலும் வழங்கி வருகிறது.

இந்த சேவை தமது நிறுவனம் கடந்த 32 ஆண்டுகள் வருகிறது என்ற அவர் இந்த நோன்பு காலத்தில் இதுபோன்ற சேவை அரசு சாரா இயக்கங்கள் செய்து வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக டத்தோ ஹாஜி அப்துல் அமிட் மேலும் கூறினார்.

இந்த சேவை தொடரவேண்டும் இதன் வழி வசதி குறைந்த மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்

இந்த நிகழ்வு பேரா மாநில இந்திய முஸ்லிம் இயக்கம்( பிரிம் ) ஆதரவுடன் நடைபெற்றதாகவும் பிரிம் இயக்கம் மேற்கொண்டு வரும் சமுகப் பணியை அவர் வெகுவாக பாராட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles