ஏசான் குருப் குழுமம் ஏற்பாட்டில் காஜாங்கில் 500 குடும்பங்களுக்கு ரமலான் உதவிகள்!

காஜாங் மார்ச் 16-
தித்திக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு நாட்டில் புகழ்பெற்ற ஏசான் குருப் ஏற்பாட்டில் நேற்று காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் 500 குடும்பங்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏசான் குருப் குழுமம் ஏழை எளிய மக்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவ்வாண்டு நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏசான் குருப் குழுமம் நாடு தழுவிய அளவில் 3,500 குடும்பங்களுக்கு ரமலான் உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நேற்று மாலையில் நடைபெற்ற நோன்பு திறப்பு விழாவின் போது
500 குடும்பங்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது.

ஏசான் குருப் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் அவர்கள் 500 குடும்பங்களுக்கு ரமலான் உதவிகளை எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பெரெஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி ஹவலர் அலி உட்பட காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கலந்து சிறப்பித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles