
இந்த ஹரிராயா பெருநாளுக்கு பின், கடன் வாங்குபவர்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல் அதனை திருப்பிச் செலுத்தும் விகிதத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்குமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (பிடிபிடிஎன்) நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு பேஸ்புக் இடுகை மூலம், பிரதமர் அன்வார் நிதியின் நிலைத்தன்மையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு குறைந்த எண்ணிக்கை பி. டி. பி. டி. என் கடன் பெற்றவர்கள் அதனை திருப்பிச் செலுத்தும் விகித பிரச்சினையை ஆராய்ந்ததாகவும், இதில் ஏற்படும் இடர்பாடுகள், எதிர்கால சந்ததியினர் தொடர்ந்து பயனடையவது பாதிக்கப்படும் என்றும் கூறினார்.
முன்னதாக, நாட்டின் உயர்கல்வித் துறையின் முன்னேற்றங்களை மறு ஆய்வு செய்வதற்காக உயர்கல்வி அமைச்சகத்தின் (கேபிடி) உயர்மட்டத் தலைமையுடனான சந்திப்புக்கும் அன்வார் தலைமை தாங்கினார்.
வேகமாக வளர்ந்து வரும் குறைக்கடத்தி தொழில்துறையை மையமாகக் கொண்டு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளை ஆராய்வதில் எதிர்கால சந்ததியினரை தயார்படுத்துவது குறித்து விவாதிக்கப் பட்ட முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.கேபிடி ஏற்பாடு செய்துள்ள இஹ்யா ரமலான் நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் உயர் நிர்வாகம் மற்றும் ஊழியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

