

கோலாலம்பூர், மார்ச் 19 –
மலேசியக் கண் பார்வையற்றோர் சங்கத்தின் (MAB) கலை & இசைப் பிரிவுகளுக்காக நிதி திரட்டும் நோக்கில், MAB Charity with Sugam Carnatic Music Festival கோலாலம்பூரில் உள்ள Temple of Fine Arts மண்டபத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது.
மலேசிய கண் பார்வையற்றோர் சங்கம், பார்வை குறைபாடு மற்றும் பிற மாற்றுத்திறனாளிகளுக்கு இசைப் பயிற்சி அளித்து, அவர்களை இந்தத் துறையில் முன்னேற்றம் பெற உதவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பார்வை குறைபாடுடையோருக்கு, இசைக்கு ஒரு முக்கியமான இடம் உள்ளது.

அவர்களுக்காக மேம்பட்ட இசை வசதிகளை உருவாக்க நிதி திரட்டும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.இந்த நிகழ்வு, MAB தலைமை செயல் அதிகாரி, டத்தோக் ஜார்ஜ் தோமஸ் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்றது.
MAB பொருளாளர் திரு. எஸ் சந்திரசேகரன், விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக முக்கியப் பங்கை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலவை உறுப்பினர் செனட்டர் ஐசையா ஜேக்கப் விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அதனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.இதில் சுகம் கர்நாடக இசை நிறுவனர் சுஜித்ரா ஜெயசீலன் மற்றும் சுபத்ரா ஜெயசீலன் உட்பட பல முக்கியமானோர் கலந்து கொண்டனர்.
சுகம் கர்நாடக மாணவர்களின் இசை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்தன.


