நீதித்துறை சம்பந்தப்பட்ட எந்த முடிவிலும் தலையிடுவதில்லை – பிரதமர்

ஷா ஆலம், மார்ச் 19 – வழக்கறிஞர் மன்றம் செய்த தீர்மானம் குறித்து கருத்துரைத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நீதித்துறை சம்பந்தப்பட்ட எந்த முடிவிலும் தலையிடுவதில்லை என்ற அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இருப்பினும், சட்டமன்றத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் அதிகாரம் மிக்கவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும், வணிகம் மற்றும் ஊழல் போன்றவற்றில் சிக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்பதையும் அவர் கோடிகாட்டினார்.

ஏனெனில், நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. காரணம் நாங்கள் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும், என்றார் அவர்.

உயர் அதிகாரிகள் உட்பட நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் எந்தவொரு வழக்குகளிலும் அரசாங்கம் இதுவரை தலையிட்டதில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

நீதி பரிபாலனத் துறை நியாயமாகவும் நேர்மையாகவும் இருப்பதை உறுதிச் செய்ய சுயேட்சை அமைப்புகள் அதன் மீது கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.

–பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles