

மஇகா தேசிய முன்னாள் உதவித் தலைவரும் முன்னாள் செனட்டருருமான டத்தோ டி மோகன் நேற்று மார்ச் 18-ஆம் நாள் 53ஆவது அகவை பிறந்த நாளை மிகவும் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் தம்பதியர் நேரில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
ம இகா தேசிய முன்னாள் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் அவர்களும் டத்தோ டி. மோகனுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தார் .
மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் அன்பானந்தன், துணை தலைவர் ஏஎஸ்பி இராஜன், டத்தோ வீரமணி, டத்தோ பதி, பினாங்கை சேர்ந்த டத்தோ தினகரன். டத்தோ சிவபாலன் ஆகியோரும் டத்தோ மோகனுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

அமரர் துன் டாக்டர் சாமிவேலு அவர்களின் ஆசியோடு டத்தோ மோகன், தீவிர அரசியலில் ஈடுபட்ட அதேவேளை விளையாட்டுத் துறையிலும் நாட்டம் கொண்டவர்.
குறிப்பாக கால்பந்து விளையாட்டில் அதிகமான இளம் கால்பந்து விளையாட்டாளர்களை உருவாக்கி சாதனை படைத்தார்.
அரசியல் சதுரங்கில் பல சோதனைகளை சந்தித்தாலும் டத்தோ மோகன் இன்னமும் செல்வாக்குமிக்க தலைவராகவே வலம் வருகிறார்.
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் மூலம் பல சாதனைகளை இவர் படைத்தார்.
மலேசிய எப்ஏஎம் கிண்ணத்தை வென்று மீபா சாதனை படைத்தது இவரின் தலைமையில் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று அவரின் இல்லத்தில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் விழாவில் அவருடைய அரசியல்-நட்பு- சமூக-விளையாட்டு வட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டு வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

