தீர்வு காணும் வரைபத்ரகாளியம்மன் கோவில் உடைபடாது! டத்தோ பண்டார் அறிவிப்பு

கோலாலம்பூர் மார்ச் 20-
நல்ல தீர்வு காணப்படும் வரை ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் உடைக்கப்படாது என்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைவர் மேயர் டத்தோஸ்ரீ மைமுனா அறிவித்தார்.

இந்த ஆலயம் அமைந்துள்ள நிலம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாகும். இங்கு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் சம்பந்தப்பட்ட ஆலயம் பல ஆண்டுகளாக இங்கு உள்ளது.

ஆகையால் இந்த விவகாரத்தில் உடனடியாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. குறிப்பாக ஆலயத்தின் மீதும் நாம் கை வைக்க முடியாது.

அதன் அடிப்படையில் இந்த ஆலயத்திற்கு மாற்று நிலம் வழங்குவதற்கு குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆலய நிர்வாகம் இதே நிலம் வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

ஆகவே இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி ஒரு சுமுகமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles