

பாதுகாப்பு குற்றங்கள் எனப்படும் சோஸ்மா கீழ் “கடுமையான விதிகளுக்கு” சட்ட சீர்திருத்தங்களை முடிக்குமாறு ஜசெக மூத்த வீரர் லிம் கிட் சியாங் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஜொகூர் இஸ்கந்தர் புத்ரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங் கூறுகையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் சோஸ்மாவின் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சட்ட சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
மனித உரிமைகளுக்கு கொடூரமாக விளங்கும் இந்த சொஸ்மா சட்டத்திற்கு முடிவு கட்டுங்கள்.
கடந்த ஆண்டு ஜூலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சொஸ்மாவுக்கு எதிராக 99 பக்கத்தான் ஹரப்பான் எம்பிக்கள் வாக்களித்தனர். அதில் நானும் ஒருவன் என்றார்.
சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல இந்தியர்களை விடுதலை செய்ய கோரி அவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
எங்களை சிறையில் அடைத்தது வைத்து அநியாயம் செய்கிறார்கள் என்று சொஸ்மா கைதிகள் சுங்கை பட்டாணி உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது கண்ணீரோடு தெரிவித்தனர்.

