
மிக மோசமான வெள்ளத்தில் சிக்கி பரிதவிக்கும் கிளாந்தான் மாநில மக்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரில் சந்தித்தார்.
நேற்றிரவு கிளாந்தான் மாநிலத்திற்கு வருகை புரிந்த அவர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கிளாந்தான் – திரெங்கானு மாநில அரசுக்கு தலா 5 கோடி வெள்ளியை வழங்கினார்.
கிளாந்தான் – திரெங்கானு மாநிலங்களை எதிர்க் கட்சிகள் ஆட்சி புரிந்தாலும் அந்த மாநில மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் கிடைக்கும்.
எதிர்க் கட்சி என்று பார்க்காமல் அனைத்து மாநில அரசுகளுடன் ஒத்துழைக்க விரும்புகிறேன்.
எனக்கு மக்கள் தான் முக்கியம். அந்த வகையில் எல்லோருக்கும் உதவுவேன் என்று அவர் சொன்னார்.

