பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் முயற்சியால் கொலம்பியா தமிழ் பள்ளிக்கு புதிய விடிவு காலம்

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் முயற்சியால் மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள கொலம்பியா தமிழ் பள்ளிக்கு புதிய விடிவு காலம் பிறந்துள்ளது.

ஆயர் தாவார் சாலை எதிர்ப்புறம் இரண்டு ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அந்த நிலம் பேராக் மாநில அரசாங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது .

இந்த இடத்தில் புதிய கட்டடம் மற்றும் மானியம் கிடைப்பதற்கு பள்ளி நிர்வாகம் முறையாக விண்ணப்பம் செய்யும் படி வழக்கறிஞர் சிவநேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இரண்டு ஏக்கர் நிலத்திற்கு பள்ளி நிர்வாகம் பிரிமியம் கட்ட தேவையில்லை.இதற்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles