

தமிழகத்திற்கு குறுகிய கால வருகை மேற்கொண்டிருக்கும் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலினை சந்தித்து இருவழி உறவுகள், வர்த்தக வாய்ப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் உள்ள மலேசிய நாட்டின் துணைத் தூதர் மலேசிய துணை தூதர் கே.சரவண குமார் மற்றும் பினாங்கு பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, கவுன்சிலர் டேவிட் மார்ஷல், பினாங்கு தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டத்தோ செளந்திராஜன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்தச் சந்திப்பில் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் குறிப்பாக தமிழகத்துக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து பேசப்பட்டது.
மதுரை கீழடி வரலாற்றுச் சிறப்பு மிக்க அகழ்வாராய்ச்சியில் ஆர்வத்தை மீட்டெடுத்த தமிழக அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.
இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு வெள்ளகோவில் வித்யா பாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பொறுப்பாளர்களை யும் டாக்டர் இராமசாமி சந்தித்து பேசினார்.

