
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் எல்.ஆர்.டி. ரெயில் டிரான்சிட் மற்றும் எம்ஆர்டி நிலையங்களில் லிப்ட், எஸ்க லேட்டர்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.
முன்பு சேதமடைந்த 10 எம்ஆர்டி நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள எல்ஆர்டி, எம்ஆர்டி மற்றும் மோனோரயில் நிலையங்களில் ஏற்பட்ட சேதம் பழுது பார்க்கப்பட்டுள்ளது.
இதன் வழி பொதுமக்களும் பேறு குறைந்தவர்களும் இனிமேல் சுலபமாக இந்த சேவையை பயன்படுத்தலாம்.
சரியான நேரத்தில் அதிரடியாக செயல்பட்ட போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

