ஆடம்பர நிகழ்ச்சிகள் வேண்டாம்! அமைச்சர்களுக்குப் புதிய பாத்தேக் சட்டையும் வேண்டாம்! பிரதமர் அன்வார் உத்தரவு

வீண் செலவினத்தைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக
பெரிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் ஒவ்வொரு நிகழ்விலும்
அமைச்சர்களுக்காகப் புதிய பாத்தேக் சட்டைகளை வாங்குவதையும்
தவிர்க்கும்படி அரசாங்கத் துறைகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்தகைய நடைமுறைகள் நிறுத்தப்பட்டால் அவற்றுக்கு உண்டாகும்
செலவுத் தொகையை உதவித் தேவைப்படும் ஏழை மக்களுக்கு வழங்க முடியும்.

அனைத்து அரசு துறைகளும் வீண் செலவினத்தைக் குறைக்க வேண்டும்.

பெரிய அளவிலும் கோலாகலமாகவும் விழாக்களை நடத்துவதை அவை
தவிர்க்க வேண்டும்.

சில துறைகள் நிகழ்ச்சிகள் அல்லது விழாக்களை நடத்தும் ஒவ்வொரு
முறையும் புதிய உடைகளை, புதியப் பாத்தேக் சட்டைகளை வாங்குகின்றன.

ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்கின்றன. அத்தகைய
நடைமுறைகளை நாம் இனி நிறுத்தவிருக்கிறோம். இந்த பணம் ஏழை மக்களுக்கு சென்றடையுட்டும் என்றார் அவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles