தேவேந்திரனுக்கு மணி மைந்தன் விருது! மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவை சார்பில் 15 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது

கோலாலம்பூர் மார்ச் 24-
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் ஏற்பாட்டில் மணிமன்ற நாள் விழாவில் 15 பேருக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தேசிய தலைவர் முருகன் மணியம் தலைமையில் இன்று கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ Star Banguet Hall மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் மணிமன்றத் நாள் கொண்டாடப்பட்டது.

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி மோகன் முக்கிய பிரமுகராக கலந்து கொண்டு இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவையின் முன்னாள் உதவித் தலைவர்களான ரவீந்திரன் பெருமாள், தொப்ளா கவுண்டர் கோவிந்தசாமி ஆகியோருக்கு மணி சக்கரவர்த்தி விருதுகள் வழங்கப்பட்டது.

மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவை நிர்வாக மன்ற முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ராமசாமி, தமிழ் மலர் ஆசிரியர் தேவேந்திரன் குஞ்சு குட்டன், மணியம் நாகலிங்கம் ஆகியோருக்கு மணி மைந்தன் விருதுகள் வழங்கப்பட்டது.

ஜோன் கென்னடி சவேரியார், பாலா பாலா சந்திரபிரகாசம், தேவேந்திரன் கலைச்செல்வம், நாராயணன் சண்முகவேல், திருமதி ரேணுகா தேவி ராமசாமி, இரவிக்குமார் நடேசன், குமார் ஆறுமுகம், இரத்தினகுமார் சுப்பிரமணியம், ராமசாமி நடேசன், அமரர் மணிபிரதாபன் செல்லமுத்து ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles