முன்பு வீர முழக்கமிட்ட தலைவர்கள் எங்கு போனார்கள்! டத்தோ மோகன் கேள்வி

கோலாலம்பூர் மார்ச் 23-
மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவிலை காப்பாற்ற வேண்டிய
பக்கத்தான் ஹரப்பானை சேர்ந்த இந்திய தலைவர்கள் இப்போது எங்கு போனார்கள் என்று ம இகா முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் கேள்வியை எழுப்பினார்.

முன்பு எங்களை குறை கூறிக் கொண்டு வீர முழக்கம் செய்த பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் இன்று மஸ்ஜித் இந்தியாவில் உள்ள தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவிலை காப்பாற்ற ஏன் ஓடோடி வரவில்லை.

முன்பு நாங்கள் ஆட்சியில் இருந்த போது எங்களை குறை கூறி அரசியல் நடத்தினார்.

அந்த காலகட்டத்தில் கூட நாங்கள் களத்தில் இறங்கி மக்களுக்காக போராடினோம்.

ஆனால் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் குறிப்பாக இந்திய தலைவர்கள் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை என்று அவர் சொன்னார்.

மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வருகை தந்த டத்தோ டி மோகன் கோவில் நிர்வாகத்தை சந்தித்து பேசினார்.

பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles