
கோலாலம்பூர் மார்ச் 23-
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்திற்கு எப்போதும் பக்கப்பலமாக இருப்பேன் என்று டத்தோ டி. மோகன் தெரிவித்தார்.
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் மணி மணிமன்ற நாள் விழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி. மோகன் இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.
தமிழோடு உயர்வோம் என்ற கொள்கை அடிப்படையில் மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றம் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது.
இளம் தலைவர் முருகன் மணியம் தலைமையில் இன்று மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றம் சிறந்து விளங்குகிறது.
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றம் எதிர் நோக்கி இருக்கும் கட்டட பிரச்சனைக்கு தீர்வு காண நானும் முன் வந்து உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.
அந்த வகையில் என்னுடைய ஆதரவு எப்போதும் மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்திற்கு இருக்கும் என்று அவர் சொன்னார்.

