


ஈப்போ, மார்ச் 23-
கிம்மா கட்சியின் ஏற்பாட்டில் நாடு முழுவதிலும் நோன்பு பெருநாள் அன்பளிப்பு வழங்கியதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஷேட் இப்ராஹிம் காதர் கூறினார்..
இந்த ஆண்டு நாடு முழுவதிலும் 2,000 வசதி குறைந்த குடும்பங்ளுக்கு வழங்கியதாக இன்று பேரா ஈப்போவில் உள்ள அம்னோ கட்டடத்தில் நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த 200 குடும்பங்களுக்கு அன்பளிப்புகளை வழங்கியப் பின்னர் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.
கிம்மா கட்சி ஆண்டு தோறும் நாடு முழுவதிலும் இந்த பெருநாள் அன்பளிப்புகளை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு இந்த உதவிகள் வழங்குவதற்கு malik streams group of companies மற்றும் ஏசான் group of companies பெரும் ஆதரவு கரம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்
இந்த உதவிகள் வழங்குவதின் வழி வசதி குறைந்த மக்களுக்கு நிதி சுமை குறைய வாயப்புகள் உள்ளது.
இந்த நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம் மக்களின் நல்வாழ்வுக்கு கிம்மா தொடரயர்ந்து ஆக்கப்பூர்வ நடவடிக்கையை எடுத்து வருவதாக டத்தோஸ்ரீ ஹாஜி ஷேட் இப்ராஹிம் காதர் மேலும் கூறினார்.
இதனிடையே நடைபெறவிருக்கும்
ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்லில் தேசிய முன்னணி வெற்றிக்கு கிம்மா கட்சி பாடுபடும் என்றார்.
இதற்குறிய நடவடிக்கையில் கிம்மா இறங்கியுள்ளது. அங்கு சுமார் 300 இந்திய முஸ்லிம் மக்கள் வாக்காளர்களாக கொண்டுள்ளனர்.
வாக்குகள் குறைவாக இருந்தாலும் தேசிய முன்னணி வெற்றிக்கு வலுவை ஊட்டும் என்றார்.
இந்த முறை அதிக பெரும்பான்மையுடன் தேசிய முன்னணி வெற்றி பெறம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆயர் கூனி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதியும், வேட்பாளர் வேட்புமனு தாக்கல் மற்றும் முன்கூட்டிய வாக்களிப்பு முறையே ஏப்ரல் 12 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
பினாங்கின் ஜார்ஜ் டவுனில் உள்ள சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த ஃபோர் கார்னர்ஸ் கால்பந்து போட்டியில் பங்கேற்ற பிறகு பிப்ரவரி 22 அன்று மாரடைப்பால் தற்போதைய இஷாம் ஷாருதீன் இறந்ததைத் தொடர்ந்து ஆயர் கூனிங்கில. இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
15ஆவது பொதுத் தேர்தலில் தாப்பா அம்னோ பிரிவுத் தலைவருமான இஷ்சாம், ஐந்து முனைப் போட்டியில் 2,213 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

