



சுங்கை பூலோ , மார்ச் 23-
கிள்ளான் வேலி கால்பந்து கிளப் ஏற்பாட்டில் இன்று சுங்கை பூலோ மெல்வூட் கிளப் திடலில் மடானி கிண்ண போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
இந்த போட்டியில் மொத்தம் எட்டு கிளப்புகள் கலந்து கொண்டன.
இறுதி ஆட்டத்தில் கிள்ளான் வேலி கிளப்பும் மெல்வூட் கிளப்பும் மோதின.
இதில் பெனால்டி கிக் வழி மெல்வூட் கிளப் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மடானி கிண்ணத்தையும் 2,000 வெள்ளி ரொக்கத்தையும் தட்டிச் சென்றது.
இரண்டாம் இடத்தைப் பிடித்த கிள்ளான் வேலி கிளப்புக்கு ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
3 ஆவது இடத்தை பிடித்த Klang Executive கிளப்புக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கிள்ளான் வேலி கால்பந்து கிளப் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், டத்தோ ராஜூ பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.

