
கோலாலம்பூர் மார்ச் 25-
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் 134 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவிலுக்கு இன்று புதிய இடத்தில் நிரந்தர நிலப்பட்டாவுடன் 4 ஆயிரம் சதுர அடி நிலம் வழங்கப்பட்டது.
கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சலேஹா அவர்கள் வீரா பத்ரகாளியம்மன் கோவிலுக்கு புதிய நிலத்தை உறுதி செய்யும் அதிகாரப் பூர்வ கடிதத்தை கோவில் தலைவர் பார்த்தீபனிடம் வழங்கினார்.
தற்போது கோவில் அமைந்துள்ள 50 மீட்டர் தொலைவில் புதிய நிலம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார்.
இப்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நிலப்பட்டா அந்தஸ்து கொண்டது.
இதன் மூலம் இந்தக் கோவிலுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.

புதிய கோவில் கட்டி முடிக்கும் வரை பழைய இடத்திலேயே கோவில் தொடர்ந்து செயல்படும்.
இந்த தருணத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கோவில் நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து போராடினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இந்த வெற்றியானது சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இன்று மாலையில் கோவிலுக்கு நிலம் வழங்கப்பட்ட நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன் என்று அவர் சொன்னார்.

