மஸ்ஜிட் மடானி அடிக்கல் நாட்டு விழா திட்டமிடப்படி நடைபெறும்! பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 25-

தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மஸ்ஜிட் மடானி அடிக்கல் நாட்டுவிழா வரும் வியாழக்கிழமை திட்டமிட்டபடி நடைபெறும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

“மார்ச் 27ஆம் தேதி திட்டமிட்டப்படி நான் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வேன் என்று புலாபோல் போலீஸ் தலைமையகத்தில் நடந்த 218ஆவது போலீஸ் தின விழாவில் உரையாற்றும் போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில், மாநிலத் தலைமை செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கர், தேசிய காவல் துறைத் தலைவர் தான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles