
ஈப்போ , போலிடெக்னிக் உங்கு ஒமார் கலாஷேத்ரா கழகத்தின் ஏற்பாட்டில் மூன்றாம் ஆண்டு தமிழர் திருநாள் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வர்த்தக பிரமுகர் டத்தோ கேசவன் சந்தனசாமி சிறப்பு வருகை புரிந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் படைப்புகள், உரியடித்தல், கோலம் போடுதல், ஆடை ஆலங்கார போட்டி போன்ற பாரம்பரிய போட்டிகள் நடந்தேறின. மேலும், பரதம், சிலம்பம் என பாரம்பரிய முத்திரையான கலைகளும் அரங்கேறின.
இத்தகைய போட்டிகளும் படைப்புகளும் மாணவர்கள் ஊடே நம் தமிழ் கலாச்சாரத்தை விதைக்கவும், நம் மரபு அழியாமல் மென்மேலும் முன்னேர ஓர் உந்துதலாக இருக்கும் என்பதே இந்நிகழ்ச்சியில் முழுமுதற் நோக்கம் என்று இக்கல்லூரியின் விரிவுரையாளரும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழு ஆலோசகர் முனைவர் தி்.எஸ்.ராமு வேலுசாமி கூறினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய டத்தோ கேசவன் , இளையோர்கள் மத்தியில் தமிழ்களின் பாரம்பரிய நிலைபெற இதுபோன்ற நிகழ்வுகள் கல்லூரிகளில் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாணவர்கள் சமூக ஊடகங்களின் வழி செல்லாமல் மேலும் நம் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்கமூட்டினார்.
போலிடெக்னிக் உங்க்கு ஒமாரின் ஆதரவுடனும் கார்த்திகேயன் ராமசந்திரன் ஆலோசனையில்வழி, குமரன் குமுதன் சுப்ரமனி தலைமையில் மணவர்கள் ஒற்றுமையின் ஊடே சிறப்புடன் இனிதே நடந்தேறியது.
இந்தக் கல்லூரி இந்திய மாணவர்களின் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற பேராதரவு வழங்கிய டத்தோ கேசவன் சந்தனசாமிக்கு நிகழ்வு ஏற்பாட்டுக் குழுக் குழுவினர் நன்றியைக் கூறிக்கொண்டனர்.

