சிவம் சுழற் கிண்ண காற்பந்து போட்டியில்பகான் ரேஞ்சர்ஸ் சாம்பியன்!

பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிவம் சுழற்கிண்ண காற்பந்து போட்டியில் பகான் ரேஞ்சர்ஸ் எஃப்.சி. வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.

கடந்த வார இறுதியில் பினாங்கு Brown திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 12 குழுக்கள் கலந்து கொண்டன.

17 வயதுக்கு உட்பட்ட இப்போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியாட்டத்தில் பகான் ரேஞ்சர்ஸ் 4-3 என்ற பெனால்டி கிக் கோல் கணக்கில் பட்டர்வொர்த் ரேஞ்சர்ஸ் குழுவை வீழ்த்தி சிவம் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.

இந்தப் போட்டியில் 3 ஆவது இடத்தை எல்.பி.கே குழுவும் கரூடா குழு 4 ஆவது இடத்தையும் பிடித்தது.

பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத்தின் தலைவர் பிரேம் குமார் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினர் இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்தினர்.

டத்தோ கிராமாட் போலீஸ் காவல் நிலையத் தலைவர் இன்ஸ்பெக்டர் அழகேசன் இந்தப் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

வெற்றி பெற்ற குழுக்களுக்குச் சிவம் கேட்டரிங் குடும்பத்தினர் பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles