டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசாங்கம் அனைத்து இனங்களையும் அரவணைக்கும்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கம் அனைத்து இனங்களையும் சமயங்களையும் அரவணைக்கும் என்று துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அன்வார் பிரதமராக பதவி ஏற்றதும் நாடு புதிய மறுமலர்ச்சியை நோக்கி செல்கிறது.

இந்த அரசாங்கத்திற்கு 148 எம்பிக்கள் ஆதரவு முழுமையாக உள்ளது.

உலோக மறுசுழற்சி துறை உட்பட அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை குறித்து உள்துறை அமைச்சிடம் பேசுவேன்..

மேலும் துணை பிரதமரின் இந்தியர் பிரிவு சிறப்பு அதிகாரியாக டத்தோ ரமேஷ் ராவ் நியமிக்கப்படுவதாக டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

ஷா ஆலம் புக்கிட் கமுனிங் ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் தலைவர் டத்தோ ஜோ சரவணன் தலைமையில் நடைபெற்ற மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், டத்தோஸ்ரீ மணிராஜ், டத்தோ கணேசன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles