

நூறு இளைஞர்கள் புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில அரசு சார்பில் இன்று தலா ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தலைமையில் நடைபெற்ற bike Care நிகழ்ச்சியில் இந்த தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
e-hailing எனப்படும் உணவு மற்றும் பொருள் விநியோக சேவை துறையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் புதிய மோட்டார் சைக்கிள்கள் வாங்குவதற்கு இந்த பணம் வழங்கப்பட்டதாக கணபதிராவ் தெரிவித்தார்.

