
விசாரணை இன்றி ஒருவரை 28 நாட்கள் தடுத்து வைக்கும் சொஸ்மா சட்டத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் குறித்து உள்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோனுடன்
இது பற்றி விவாதித்ததாக அவர் கூறினார்.
ஜாமின் வழங்கும் வரையரைக்கான விதிகள் உட்பட சொஸ்மாவின் கடுமையாக குறைகூறப்படும் அம்சங்களை கவனிக்க வேண்டியுள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
இந்த நோக்கத்திற்காக சொஸ்மா சட்டத்தில் தொடர்புள்ள அனைத்து தரப்புகளுடன் கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்ற தமது ஆலோசனைக்கு Saifuddin Nasution இணக்கம் தெரிவித்துள்ளார் என்பதையும் இது மகிழ்ச்சியை தருகிறது என்றார்.
சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களான குணசேகரன், சாமிநாதன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டபோது அவர்களுக்காக இலவசமாக வாதாடியவர் ராம் கர்ப்பால் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சொஸ்மாவுக்கு எதிராக துணிந்து குரல் எழுப்பியவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

