
கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளிகளைச் சீரமைக்கவும், புதுப்பிக்கவும் கல்வி அமைச்சு (KPM) 5 கோடி வெள்ளியை வழங்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த மாநிலக் கல்வித் துறை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் (PPD) வழங்கும் முழுமையான அறிக்கைக்காக காத்திருப்பதாக கல்வி அமைச்சர் அமைச்சர் பாட்லினா சிடேக் தெரிவித்தார்.
திரங்கானு மற்றும் கிளந்தானில், இதுவரை நாடு முழுவதும் 287 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

